Padasalai.Net.in - No.1 Educational Website

School Morning Prayer Activities - 08.02.2024

School Morning Prayer Activities - 08.02.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.02.2024

திருக்குறள்

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : மெய்யுணர்தல்

குறள்:352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.

விளக்கம்:
மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.

பழமொழி :
Money makes many things

பணம் பாதளம் வரைக்கும் பாயும்.

இரண்டொழுக்க பண்புகள் :
1.என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.

2.பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :
அன்பு என்பது எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் ஒரு பழம், மேலும் எல்லோர் கைகளுக்கும் எட்டும் தூரத்தில் தான் உள்ளது. --அன்னை தெரசா

பொது அறிவு :
1. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?
விடை: வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)

2. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்

லாலா லஜபதி ராய்

English words & meanings :
whammed(n)- Hammer சம்மட்டி,சுத்தியல்; wandering (v) - walking or moving in a aimless way நோக்கம் இல்லாமல் சுற்றித் திரிதல்.

ஆரோக்ய வாழ்வு :
கோவை கீரை : கோவைக்கீரை குளிர்ச்சியானது. இந்த கோவை இலையை நிழலில் உலர்த்தி எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, அந்த பொடியைப் போட்டு நன்கு காய்ச்சி கஷாயமாக எடுத்துக் கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியடையும்.

பிப்ரவரி 08 இன்று

சாகிர் உசேன் அவர்களின் பிறந்த நாள்

சாகிர் உசேன் (Zakir Hussain, 8 பெப்ரவரி 1897 - 3 மே 1969) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.

கல்வித் துறையில் இவர் ஆற்றிய அருந்தொண்டினைப் பாராட்டி ,இந்திய அரசு இவருக்கு 1954 ல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது. 1963-ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.


நீதிக்கதை

நாயும் அதன் நிழலும்

முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது.

செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம். "எலும்புத்துண்டை தருமாறு" கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ "இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்", என்று கூறி விட்டுச்சென்றது.

செல்லும் வழியில் ஒரு பாலத்தை கடக்க வேண்டியிருந்தது. நாய் பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது.

அதைக் கண்ட நாய் இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்" என்று நினைத்தது. உடனே அது பலமாக 'லொள்','லொள்' எனக் குரைத்து கொண்டே தண்ணீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது.அதனால் அதன் வாயில் இருந்த எலும்புத்துண்டும் தண்ணீரில் விழுந்தது. தண்ணீரில் விழுந்தவுடன் தான் அந்த முட்டாள் நாய்க்கு புரிந்தது இது நிழல் பிம்பம் என்று.

அதனைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேற வேண்டியதாயிற்று.

நீதி: பேராசை பெரு நஷ்டம்.

இன்றைய செய்திகள் - 08.02.2024

*பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் ஆனது உத்தரகண்ட்; கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த மசோதா சட்டமாகிவிடும்.

*உதகை மண் சரிந்து விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவித்தார் மு க ஸ்டாலின்.

*இந்தியர்கள் இனி ஈரானுக்கு செல்ல விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

*இந்தியாவில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று.

*தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; நியூசிலாந்து அபார வெற்றி;

Today's Headlines
* Uttarakhand became first state to enact Common Civil Code; The Bill will become a law after the assent of the Governor.

* Landslide accident in Ooty: C.M. , M.K. Stalin announced a relief fund for the families of the victims.

* The government of Iran has announced that Indians will no longer need a visa to travel to Iran.

* 157 more people infected with corona virus in India.

*First Test cricket match against South Africa; New Zealand won big.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Share:

Blog Archive

Definition List

Unordered List

Support